மத்திய அரசு பணி… 12ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்- விவரங்கள் இதோ…

கோவை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் வழங்கப்பட உள்ளது.

Advertisement

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (Staff Selection Commission-CHSL)
Combined Higher Secondary Level (10.2) Examination) பன்னிரண்டாம் வகுப்பு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Lower Division Clerk (LDC), Junior Secretariat Assistant (JSA) Data Entry Operator (DEO). போன்ற பணியிடங்கள் இப்போட்டித்தேர்வின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2536 ஆகும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு, வயது வரம்பு: 27 ஆகும். இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும்(OBC), தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு-5 ஆண்டுகளும் உச்ச வயது வரம்பில் சலுகை உண்டு.

Advertisement

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07/10/2026 மேலும் இதர விவரங்களுக்கு https//ssc.gov.in என்ற இணையதளம் வாயிலாக அறியலாம்.
கோயம்புத்தூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக SSC-CHSL போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08/10/2026 அன்று துவங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகளுக்கு பாடக்குறிப்புகள் வழங்கப்படும். வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள்

Advertisement

மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 9499055937 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...