மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய கோவை ஆட்சியர்…

கோவை: மாவட்ட ஆட்சித்தலைவர் 42 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,26,915/- கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், GD Naidu Trust மற்றும் Chief makers NGO ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் 42 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ரூ.6.26,915 கல்வி உதவித்தொகையாக வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, துணை ஆட்சியர் மற்றும் உயர்கல்வி கட்டுப்பாட்டு மைய பொறுப்பு அலுவலர் சங்கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் மூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பயின்ற 11,353 மாணவ, மாணவியர்களில் தேர்வில் வெற்றிபெற்ற 10,408 மாணாக்கர்களில் 10,310 மாணாக்கர்கள் (99 விழுக்காடு) உயர்கல்வியில் சேர்ந்துள்ள சிறப்பான சாதனை எட்டப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் துணைத் தேர்வு எழுதிய 945 மாணவர்களில் 815 மாணவர்கள் (86 விழுக்காடு) உயர்கல்வியில் சேர்க்கப்பட்டு மாநில அளவில் கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.

மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேலும் அதிகரித்து. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள்ஒற்றைப் பெற்றோர் மற்றும் பெற்றோர் இல்லாத 148 மாணவர்களின் உயர்கல்வியைத் தொடர்வதற்கு இதுவரை சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 10 பெற்றோர் இல்லாத / வறுமைக்கோட்டிற்குட்பட்ட தகுதியுள்ள மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரிகளின் ஒத்துழைப்போடு இலவச உயர்கல்வி வழங்கிட பரிந்துரைக் கடிதங்களும் வழங்கப்பட்டுமாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாகஉயர்கல்வியைத் தொடர பொருளாதார உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று 42 மாணாக்கர்களுக்கு ரூ.6.26,915/- கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...