பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நாள்- அமைச்சர் கூறிய தகவல்…

கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நாளை முன்னிட்டு புகைப்பட தொகுப்பு நடைபெறும் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சுப்ரமணியம் வளாகத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், பெருந்தலைவர் காமராஜர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர். பாரத ரத்னா சுப்பிரமணியம், அருட்செல்வர் மகாலிங்கம் ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, விவசாய பெருங்குடிமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினத்தை முன்னிட்டு, இத்திட்டத்தை உருவாக்குவதற்கு அரும்பாடுபட்ட பெருந்தலைவர் காமராஜர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா திரு.சி.சுப்பிரமணியம்அருட்செல்வர் மகாலிங்கம் ஆகியோரின் பங்களிப்புகளைப் போற்றும் வகையில், அவர்களது முழுத்திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தையும்நீர்வளங்களைப் பாதுகாத்து முறையாகப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான 07.10.1961-ஆம் தேதியை பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினம் என ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகிறோம்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட இந்நாளில், இத்திட்டத்திற்காக அரும்பாடுபட்ட தலைவர்களின் தியாகம், தொலைநோக்குப் பார்வை மற்றும் பங்களிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், அவர்களின் புகைப்படத் தொகுப்புகள் இவ்வளாகத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என தெரிவித்தார்.

Advertisement

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினத்தை முன்னிட்டு. கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை, சோலையாறு அணையில் அமைந்துள்ள முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல்.ராவ் திருவுருவச் சிலைக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மலர் மாலை அணிவித்து, கௌரவித்தனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சாதி பெயர் கொண்ட பகுதிகளுக்கு புதிய பெயர்கள் – கோவை மாநகராட்சியில் கோரிக்கை

கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாதி பெயர்களில் உள்ள தெருக்கள், ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என திராவிடர் தளம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...