10 ஆண்டு காத்திருப்பு; பணி நிரந்தரம் இல்லை! அரசு ஊர்தி ஓட்டுநர்கள் வேதனை

கோவை : அரசு ஊர்தி ஓட்டுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாவட்ட வாரியாகத் திரண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு ஊர்தி ஓட்டுநர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய வாகனங்களுக்குப் பதிலாகப் புதிய வாகனங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும், ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாநிலச் செயலாளர் பச்சையப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசு ஊர்தி ஓட்டுநர்கள் இதுவரை அரசுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. இருப்பினும், தாங்கள் தொடர்ந்து முன்வைத்து வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

Advertisement

ஓட்டுநர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்குப் பதிலாகப் புதிய ஓட்டுநர்கள் நியமிக்கப்படாமல் பணியிடங்கள் காலியாக விடப்படுகின்றன.

புதிய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தாலும், ஓட்டுநர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிய வாகனங்களைக் கொள்முதல் செய்யாமல் பழைய வாகனங்களையே தொடர்ந்து இயக்குமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, அரசு ஊர்தி ஓட்டுநர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால், மாவட்ட வாரியாக உறுப்பினர்களை ஒருங்கிணைத்துத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவையில் அரசு ஊர்தி ஓட்டுநர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...