கோவையில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட முயற்சி? 6 பேரிடம் தீவிர விசாரணை!

கோவை : கோவையில் டாஸ்மாக் பாரில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்றதாக 6 பேரை போலீசார் கைது செய்து, ரூ.1.86 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

கோவை பேரூர் பைபாஸ் சாலையில் 11 டூ 11 என்ற பெயரில் டாஸ்மாக் பார் (மனமகிழ் மன்றம்) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. பின்னர், மதுபானம் வாங்கிய அவர்கள் அதற்கான பணத்தைச் செலுத்த ரூ.500 நோட்டுகளைக் கொடுத்துள்ளனர்.

Advertisement

அந்த நோட்டுகளைப் பார்த்த பார் ஊழியர்களுக்கு அவை கள்ளநோட்டுகளாக இருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நபர்களிடம் ஊழியர்கள் விசாரித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் அந்த 6 பேரையும் பிடித்து வைத்துக்கொண்டு கடைவீதி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கொடுத்த ரூ.500 நோட்டுகள் கள்ளநோட்டுகள் எனச் சந்தேகிக்கப்பட்டதுடன், இதேபோல் கடைவீதிகள் மற்றும் பொதுமக்களிடமும் அவற்றைப் புழக்கத்தில் விட முயன்றதாகத் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்றதாகக் கூறப்படும் கோவை கரும்புக்கடை பாத்திமா நகரைச் சேர்ந்த அக்தர் பர்வேஷ் (21), ஆபில் (20), செல்வபுரம் அமுல் நகரைச் சேர்ந்த யாயூ லியாஸ் (19), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷாகித் (19), முகமது இர்பான் (18), முகேஷ்குமார் (19) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.86 லட்சம் மதிப்பிலான 372 எண்ணிக்கையிலான ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நோட்டுகள் எங்கிருந்து பெறப்பட்டன, அவற்றைக் கைதானவர்கள் தாங்களே அச்சடித்தார்களா அல்லது வேறு நபர்களிடம் இருந்து கமிஷன் அடிப்படையில் வாங்கி கோவையில் புழக்கத்தில் விட முயன்றார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவையில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.1.86 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...