கோவையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு, எச்சரிக்கை

கோவை : கோவை மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, திருநங்கைகளை நேரில் அழைத்து மாநகர போலீசார் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கினர். மாற்று வாழ்வாதாரத்துக்கான அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்த போலீசார், தொடர்ந்து புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

கோவை மாநகர போலீஸ் வடக்கு துணை கமிஷனர் தங்கதுரை உத்தரவின்பேரில், சாய்பாபா காலனி சரக உதவி கமிஷனர் சரவணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் கவுண்டம்பாளையம், துடியலூர், சாய்பாபா காலனி மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இணைந்து செயல்பட்டனர்.

Advertisement

மாநகர எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக வந்த புகார்களின் அடிப்படையில், தனிப்படையினர் சம்பந்தப்பட்ட திருநங்கைகளை நேரில் அழைத்து அறிவுரைகளை வழங்கினர். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருநங்கைகள் மாற்று வாழ்வாதாரத்தைப் பெறும் வகையில், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான ஆவணங்களைத் தயாரித்துத் தருவதாகவும் போலீசார் உறுதியளித்தனர்.

Advertisement

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பின்னரும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டாலோ அல்லது தொடர்ந்து புகார்கள் எழுந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

கோவையில் பாலியல் தொழில் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கு போலீசார் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை வழங்கினர்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...