கோவை: அக்டோபர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (MICRO JOB FAIR) மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அக்டோபர் -2026 மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2026 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேரு நகர் மேற்கு காளப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சுகுணா கலையரங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமிற்கு பத்தாம் வகுப்புபன்னிரெண்டாம் வகுப்புபட்டப்படிப்பு. ஐடிஐ. டிப்ளமோ, முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம் இம்முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம்.
50 முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர்இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும் இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள மனுதாரர்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேருநகர் மேற்கு காளப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சுகுணா கலையரங்கத்திற்கு நேரடியாக வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 0422-2642388 என்ற தெலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் இவ்வேலைவாப்பு முகாமில் கலந்துகொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர தெரிவித்துள்ளார்.






