போலி லிங்க், ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி… மாணவிகளுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

கோவை :கோவை மாவட்ட போலீசார் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட எஸ்.பி. பவன் குமார் ரெட்டி அறிவுறுத்தலின்படி, மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் சுமார் 350 மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் குறிப்பாக மாணவிகளை குறிவைத்து நடைபெறும் பல்வேறு இணையவழி மோசடிகள் குறித்தும், அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

Also Read: SIR படிவத்திற்கு இறுதி சடங்கு நடத்தி கோவையில் கரப்பான் பூச்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

Advertisement

ஆன்லைன் முதலீட்டு மோசடி, கல்வி உதவித்தொகை மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, கே.ஒய்.சி. விவரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறி நடைபெறும் மோசடி, போலியான ஏபிகே கோப்புகள் மூலம் நடைபெறும் மோசடி, போலி வாடிக்கையாளர் சேவை எண்கள், ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி, திருமண இணையதள மோசடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடி, கடன் செயலிகள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், செல்போன்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது, சமூக வலைதளங்களால் ஏற்படும் தாக்கங்கள், மொபைல் கேம்களை அளவுக்கு அதிகமாக விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இணையவழி மிரட்டல்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement

Also Read: திருமண தோஷ பரிகாரம் செய்வதாகக் கூறி பெண் இன்ஜினீயரிடம் பாலியல் அத்துமீறல்? கோவை ஜோதிடர் மீது புகார்

அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ரகசியத் தகவல்களைப் பகிரக்கூடாது என்றும், சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மற்றும் செயலிகளைத் திறப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இணையவழி பண மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக 1930 என்ற சைபர் நிதி மோசடி உதவி எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும். மேலும், https://www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...