விழாக்காலத்தை முன்னிட்டு கோவை வழியாக சிறப்பு ரயில்!

கோவை: விழாக்காலம் மற்றும் தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவை போத்தனூர் – அசாம் மாநிலத்தின் நியூ டின்சுகியா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது

அதன்படி, போத்தனூரில் இருந்து அக்டோபர் 16ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அக்டோபர் 19ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அசாம் மாநிலத்தின் நியூ டின்சுகியா சென்றடையும்.

Advertisement

மறுமார்க்கத்தில், அக்டோபர் 19ஆம் தேதி இரவு 8 மணிக்கு நியூ டின்சுகியாவில் இருந்து புறப்படும் ரயில், அக்டோபர் 22ஆம் தேதி இரவு 11 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்றன. மேலும், காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேஸ்வர், கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

Advertisement

இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி, பொதுப்பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் இடம்பெறும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பயனுள்ள தகவலை ரயில் பயணிகளுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...