மாஸ்டர் பிளான் முதல் SACRIFICE வரை… இன்று ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

கோவை: இந்த வாரம் வெளியாகப் போகும் ஓடிடி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பற்றி தற்போது காணலாம்.

Advertisement

காலம் மாற மாற சினிமாவின் அத்தியாயமும் மாறிக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் தியேட்டர்களில் வரும் படங்களுக்கே வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது அதற்கு இணையாக ஓடிடி படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும், தியேட்டர்களுக்கு வராமலே, ஓடிடியிலேயே வெற்றி அடைந்த படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்சார் கட் பிரச்சினை இல்லாததால், கவர்ச்சி மற்றும் ஆபாச வார்த்தைகள் ஓடிடி வெப் சீரியஸ்களில் தாராளமாக இருக்கின்றன. இது இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த வகையில், இன்று (அக்.,16) ஓடிடியில் வெளியாகப்போகும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளைச் சேர்ந்த 6 முக்கிய படங்களைப் பற்றி காணலாம்.

Advertisement

மாஸ்டர் பிளான் – அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video)

அருண் விஜய் – அக்ஷரா ரெட்டி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர் பிளான். பாவல் நவகீதன், திவ்ய ஜகத் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மோனா லிசா ஓவியத்தைத் திருடுவதற்காக, மாஸ்டர் திருடன் ரோஜர் (ஸ்டான்லி டூச்சி) ஒரு இத்தாலிய ஹேக்கர் (சிமோனா டபாஸ்கோ) மற்றும் பிரெஞ்சு வெடிபொருள் நிபுணர் (விக்டர் பெல்மாண்டோ) ஆகியோரை வேலைக்கு நியமிக்கிறான்.

Advertisement

ஆனால், ரோஜர் தான் வேலைக்கு சேர்த்த இருவரும் பல ஆண்டுகளாகப் பிரிந்த தனது சொந்தப் பிள்ளைகள் மற்றும் தான்தான் அவர்களின் உயிரியல் தந்தை என்ற உண்மையை வெளிப்படுத்தும் போது அவர்களின் திருட்டுத் திட்டம் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்கிறது.

இந்தப் படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

டிசி (DC) – சோனிஎல்ஐவி (SonyLIV)

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான படம் தான் டிசி. வாமிகா சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். தேவதாஸ், சந்திரா கதாபாத்திரத்தின் சுருக்கமே டிசி. சரத்சந்திர சட்டோபாத்யாயின் புகழ்பெற்ற ‘தேவதாஸ்’ நாவலின் நவீன மற்றும் அதிரடியான மறுஉருவாக்கமே இந்தத் திரைப்படம் ஆகும். ஒரு கொள்ளைச் சம்பவம் தவறிப்போய், ஒரு காவலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தேவதாஸ் என்ற குற்றவாளி (இயக்குநர் லோகேஷ் கனகராஜ்) தலைமறைவாகிறான்.

இரக்கமற்ற கூலிப்படையின் தலைவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள, அவர் சந்திரா (வமிகா காபி) என்ற பாலியல் தொழிலாளியுடன் இணைந்து குற்ற உலகை எதிர்கொள்ள உதவுகிறார். படத்தின் கதை எதிர்மறையான விமர்சனங்களை கொண்டிருந்தாலும், இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசையே ஒட்டுமொத்த கதையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

இந்தப் படம் இன்று சோனி எல்ஐவி (SonyLIV)யில் வெளியாகிறது.

டென்சிங் (Tenzing) – ஆப்பிள் டிவி (Apple TV)

கதைக்களம்: நேபாள-இந்திய ஷெர்ப்பா டென்சிங் நோர்கே (ஜெண்டன் புன்ட்சோக்) மற்றும் நியூசிலாந்து மலையேறும் வீரர் சர் எட்மண்ட் ஹிலாரி (டாம் ஹிடில்ஸ்டன்) ஆகியோர் இணைந்து 1953 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வரலாற்றுச் சாதனையை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படம்.

மலை மீது டென்சிங்கிற்கு உள்ள ஆன்மீகப் பற்று, அவரது தனிப்பட்ட போராட்டங்கள் மற்றும் தன்னை ஒரு சமமான மலையேறுபவராக அங்கீகரிக்கக் கோரி காலனித்துவத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டமத்தை இந்தப் படம் அழுத்தமாகப் பேசுகிறது.

இந்தப் படத்தை ஆஸ்திரேலிய தயாரிப்பாளர் ஜெனிஃபர் பீடம் இயக்கியுள்ளார். டென்சிங் நோர்கேவாக ஜென்டன் பன்ட்சோக்கும், சர் எட்மண்ட் ஹில்லரியாக டாம் ஹிடில்ஸ்டனும், ஜான் ஹன்ட்டாக வில்லெம் டஃபோவும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் இன்று ஆப்பிள் டிவியில் வெளியாக இருக்கிறது.

ஆஷா (Aasha) – ஜீ5 (ZEE5)

ஆஷா என்ற மலையாளத் திரைப்படத்தை சஃபர் சனல் இயக்கியுள்ளார். ஆஷாவாக பிரபல நடிகை ஊர்வசி நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி, லட்சுமி மேனன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஊர்வசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படமாகும். அவர் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்கும் ஒரு விதவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஒரு சிறிய கார் விபத்தைத் தொடர்ந்து அவரது வாழ்க்கை முற்றிலுமாகத் தலைகீழாக மாறுகிறது.

அவர் தனது நிலையில் இருந்து பின்வாங்க மறுப்பதால், ஆக்ரோஷமான கதாபாத்திரமான ஜீமோன் (ஜோஜு ஜார்ஜ்) என்பவருடன் கடுமையான ஈகோ மோதல் ஏற்படுகிறது. இந்த எளிய போக்குவரத்துத் தகராறு ஒரு பயங்கரமான இருண்ட சதி நாடகமாக மாறுவதை இப்படம் விவரிக்கிறது.

இந்தப் படம் இன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

மனி டிராப்: தி கருண் ட்ரெஷர் (Money Trap: The Karun Treasure) – நெட்ஃபிக்ஸ்

துருக்கி நாட்டைச் சேர்ந்த மனி டிராப்: தி கருண் ட்ரெஷர் ஒரு சர்வதேச திரைப்படமாகும்.பிகேஎம் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஷெனோல் சோன்மேஸ் இயக்கியுள்ளார். துருக்கி முக்கிய நடிகர்களான இல்மாஸ் எர்டோகன், கிவான்ஸ் டாட்லிடுக்,டிமெட் அக்பாக் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

புகழ்பெற்ற ‘கருண் புதையலின்’ புராண வரைபடம் கைவசம் கிடைத்தவுடன், மோசடி மன்னன் அசிம் நோயன் (இல்மாஸ் எர்டோகன்) தனது பழைய கும்பலை திருட்டுக்காக மீண்டும் ஒன்றிணைக்கிறான். இருப்பினும், எதிர் கும்பல்கள் மற்றும் சர்வதேச புதையல் வேட்டைக்காரர்களின் குறுக்கீட்டால் இந்த இறுதித் திட்டம் பெரும் குழப்பத்திலும் சவால்களிலும் முடிகிறது.

பரபரப்பான கதை களத்தை கொண்ட இந்தத் திரைப்படம் நெட்ஃபிக்ஸில் இன்று வெளியாகிறது.

சாக்ரிஃபைஸ் (Sacrifice) நெட்ஃபிக்ஸ்

இயக்குநர் ரோமெயின் கவ்ராஸ் இயக்கியுள்ள சாக்ரிஃபைஸ் திரைப்படம் ஒரு ஹாலிவுட் படமாகும். சாகசமிக்க, நகைச்சுவை மற்றும் அதிரடியான கதை அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்தப் படத்தில் கிறிஸ் எவன்ஸ், அன்யா டெய்லர், வின்சென்ட் காசெல், சல்மா ஹயக் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஒரு தொலைதூர கிரேக்கத் தீவில் கோடீஸ்வரர் (வின்சென்ட் காசெல்) மற்றும் அவரது பாப்-ஸ்டார் மனைவி (சல்மா ஹயக்) நடத்தும் உயர்தர விழாவை, தீவிரவாதக் குழு ஒன்று கடத்தும் நையாண்டி த்ரில்லர் திரைப்படமாகும்.

ஜோன் (அன்யா டெய்லர்-ஜாய்) தலைமையிலான அக்குழு, உலகளாவிய பேரழிவைத் தவிர்க்க மனித பலி ஒன்றைக் கொடுப்பதே ஒரே வழி என்று நம்பி, சுயநலமான திரைப்பட நடிகர் (கிரிஸ் எவன்ஸ்) உள்ளிட்ட முக்கியப் பணக்காரர்களைப் பணயக்கைதிகளாகப் பிடிக்கிறது. அதன் பிறகு அங்கு நடக்கும் உயிர் பிழைப்புக்கான போராட்டம் இப்படத்தின் கதையாகும்.

சுவாரஸ்மிக்க பொழுதுபோக்கு கதை அம்சத்தைக் கொண்ட இந்தப் படம் நெட்ஃபிக்ஸில் இன்று வெளியாகிறது.

இது போன்ற சினிமா மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள NCC செய்திகளை பாலோ செய்யுங்கள்.

Amazon Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

மனம் உடைந்து போன தேவா… ரஜினி செய்த பேருதவி; நன்றிக்கடன் பட்ட குடும்பம்

கோவை: தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி இசையமைப்பளராக வலம் வந்த தேவாவின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இவரது வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தும்...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...