இது தான் அரசியல் நாகரிகமா? திமுக கனிமொழிக்கு, தவெக கனிமொழி கண்டனம்!

கோவை: முதலமைச்சரை பொதுமேடையில் இழிவாகப் பேசுவதை பார்த்து ரசிப்பது தான் உங்கள் அரசியல் நாகரிகமா என்று, திமுக., எம்.பி கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியாவுக்கு தவெக எம்.எல்.ஏ., கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு:-

Advertisement

“பாரம்பரியக் கட்சி” என்று பெருமை பேசிக்கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகம் இதுதானா? தமிழ்நாட்டின் முதலமைச்சரைப் பொதுமேடையில் ஒருமையில் பேசுவதும், இழிவான வார்த்தைகளால் விமர்சிப்பதும், அதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் ரசித்துச் சிரிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

குறிப்பாக, திமுக கூட்டத்தில் தொண்டர் ஒருவர் முதலமைச்சர் குறித்து அருவருக்கத்தக்கவகையில் இழிவாகப் பேசியபோது, அதனை ரசித்து ஆரவாரம் செய்து நகைப்புக்குள்ளாகியது பொதுவாழ்வில் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நாகரிகம் குறித்த கேள்வியை எழுப்புகிறது.

Advertisement

ஒரு மாநகராட்சியின் மேயராகப் பொறுப்பு வகிப்பவர், இத்தகைய தருணங்களில் கண்ணியத்தையும் பொறுப்புணர்வையும் நிலைநாட்ட வேண்டாமா? முதலமைச்சர் என்ற அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பில் இருப்பவரைப் பற்றிப் தொண்டர் ஒருவர் பேசும்போது குறைந்தபட்ச மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதைத் தனது கட்சியினருக்கு எடுத்துரைக்க வேண்டாமா?

திமுக எம்.பி கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா

அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கலாம். ஆனால், தனிநபர் இழிவுபடுத்தலையும் கண்ணியமற்ற பேச்சையும் அரசியல் கொண்டாட்டமாக மாற்றுவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல.

Advertisement

திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி அவர்களும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்களும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசியல் தலைவர்களின் பேச்சும் நடத்தையும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும். பொதுமேடைகளில் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் பேணுவதே அரசியல் நாகரிகத்தின் அடையாளம். இழிவான பேச்சுகளை ரசித்துச் சிரிப்பதால் அரசியல் விவாதத்தின் தரம் உயராது; மாறாக, பொதுவாழ்வின் மாண்பே கேள்விக்குள்ளாகும்.

எனவே, “So Called” பாரம்பரியக் கட்சி என்று தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் திமுக, முதலில் பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை மரியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோ-கார்ட் போட்டியில், தாய்லாந்தில் இந்தியாவுக்காகக் களமிறங்கும் கோவை சிறுவன் குரு தருண்!

கோவையைச் சேர்ந்த 12 வயது குரு தருண், தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் மோட்டார்ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...