மெக்காவில் நெற்றியில் முத்தமிட்ட வங்கதேச தம்பதி…தூக்*கிலிட்ட சவுதி அரசு.. அப்படி என்ன நடந்தது…?

கோவை: மெக்காவுக்கு ஹக் பயணம் மேற்கொண்ட வங்கதேச தம்பதி தூக்கில் போடப்பட்ட சம்பவம் பற்றி செய்தியை விரிவாக காணலாம்.

ஹஜ் புனித பயணம்

Advertisement

முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரின் முக்கிய கடமைகளில் ஒன்று மெக்காவுக்கு (ஹஜ்) புனித பயணம் மேற்கொள்வது தான். இதற்காக, தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரூ.25 ஆயிரமாக இருந்த அரசு மானியத்தை, தமிழக அரசு ரூ.35 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. தமிழக ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும்.

இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில், வங்கதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்து வருகின்றனர்.

Advertisement

ஹஜ் பயணம்… கடைசி பயணம்..

அந்த வகையில், வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பாசிர் மற்றும் சிதி அக்தர் ஆகிய இருவரும், பிறரைப் போல மெக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு நடந்த சம்பவம் தான் இவர்களின் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்து விட்டது.

Advertisement

பிறரைப் போல மெக்காவில் உள்ள புனித ஸ்தலத்தை தங்களின் கைகளால் தொட்டவாறு, அல்லாவை வேண்டிக் கொண்டிருந்த வேளையில், இருவரும் தங்களின் பிறவி பலனை அடைந்ததை நினைத்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர். அப்போது, சிதி அக்தரின் நெற்றியில் நஸ்ருல் இஸ்லாம் முத்தம் கொடுத்துள்ளார். மேலும், கைகளிலும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை அங்கிருந்த பாகிஸ்தான் யாத்ரீகர் வீடியோவாக பதிவு செய்து, அதனை சவுதி அரேபியா போலீஸாருக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனே மசூதி பகுதிக்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புனித நகரமான மெக்காவின் மசூதிக்குள் அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாகவும், புனித தலத்தின் கண்ணியத்தை கெடுத்து விட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகளும், முஸ்லிம்களின் தஸீர் சட்டத்தின் முறைப்படி, இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

கிளம்பிய எதிர்ப்பு

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 14ம் தேதி இருவரும் தூக்கிலடப்பட்டனர். சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜித் அல் சவுத்தின் அரச உத்தரவின் பேரில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் தம்பதியா? காதலர்களா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

பின்னர், இருவரின் உடலை சவப்பெட்டியில் போட்டு, வங்கதேசத்தில் உள்ள அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தம்பதியின் செயலுக்கு எதிர்ப்பு குரலை விட, ஆதரவு குரலே மேலோங்கியுள்ளது. பலரும் சவுதி அரேபிய அரசின் செயலைக் கண்டித்து வருகின்றனர். மேலும், தஸீர் சட்டம் குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உலகமே அதிர்ச்சி

உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த செயல் குறித்து வங்கதேச அரசு விளக்கம் கேட்டுள்ளது. ஜிட்டாவில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கோ, கைதானவர்களின் குடும்பத்தினருக்கோ, இந்த மரண தண்டனை தொடர்பாக எந்த தகவலையும் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தண்டனை நிறைவேற்றப்படலாமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோரியுள்ளது. மேலும், வியன்னா உடன்படிக்கையை மீறி, இரு வங்கதேச நாட்டவர்களை தூக்கிலிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

1981ம் ஆண்டு வியன்னா உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, சவுதி அரேபியா அதன் உறுப்பு நாடாக ஆனது. அதன்படி, வியன்னா உறுப்பு நாடுகளைச் சேர்ந்த ஒருவர், வேறு ஒருநாட்டில் கைது செய்யப்பட்டாலோ, காவலில் வைக்கப்பட்டாலோ, அவர் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் தாமதமின்றி, நாட்டுத் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை இருக்குமோ?

இது ஒருபுறம் இருந்தாலும், வெறும் முத்தம் கொடுத்ததால் மட்டுமே இந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றும், பாலியல் ரீதியாக அத்துமீறியதால் தான் இந்த அளவுக்கு விஷயம் பெரிதானதாக சிலர் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவாக இருந்திருந்தால்…

இது குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்த பிராக் அமைப்பின் குடியேற்ற பிரிவு தலைவர் ஷரிஃபுல் ஹசன், சவுதி அரேபியாவுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது; வங்கதேச நாட்டவரிடம் இதற்கு முன்பும் சவுதி அரசு இதுபோன்று நடந்து கொண்ட வரலாறுகள் உள்ளன. இதே இந்த இருவரும் அமெரிக்கர்களாக இருந்திருந்தால், சவுதி அரேபியா இதே போன்று தான் அவர்களிடமும் நடந்து கொண்டிருக்குமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Flipkart Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...