கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு- சூழல் சுற்றுலா மூடல்…

கோவை: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றால சூழல் சுற்றுலா இன்று, அக்டோபர் 24ஆம் தேதி, தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் மூடப்பட்டிருக்கும் எனத் வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் .

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் போதை மாத்திரை விற்பனை- 5 பேர் கைது…

கோவை: கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு ரூ.7.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், கஞ்சா, ஊசி பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாநகரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...