ஜாமீனில் வெளிவந்த கார்த்திகா- உற்சாக வரவேற்பு அளித்த நாதக…

கோவை: கோவை மத்திய சிறையிலிருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் விஜய் வருகையின்போது போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் இன்று கோவை மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கு சிறை வாசலில் நாம் தமிழர் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் விஜய் கடந்த 4-ஆம் தேதி அங்கு சென்றிருந்தார்.

அப்போது நடைபெற்ற சாலை மறியல், காவல் நிலைய முற்றுகை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார், கட்சி நிர்வாகிகள் இசை மதிவாணன், கந்தசாமி, சூர்யா, சஞ்சய் காந்தி, விக்னேஷ், ஷேக் பரித் உள்ளிட்ட 12 பேரை தாராபுரம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 12 பேரும் ஜாமீன் கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

Advertisement

இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய நாகர்கோவிலைச் சேர்ந்த வெங்கடேஷ், சென்னையைச் சேர்ந்த கோகுல், கோவையைச் சேர்ந்த மோகன் பிரசாத் ஆகிய மூவரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகா உள்ளிட்ட 9 பேரும் கோவை மத்திய சிறையிலிருந்து இன்று வெளியே வந்தனர்.

அப்போது சிறை வாசலில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மூன்றாவது நாளாக தொடரும் அகிலன் வழக்கு- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்…

கோவை: மூன்றாவது நாளாக தொடரும் அகிலன் தற்கொலை வழக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. கோவையில் பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில் ஆட்சியருடன் பேச்சுவார்த்தை உடன்படாததால் உறவினர்கள், முற்போக்கு அமைப்பினர் தொடர் காத்திருப்பு...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...