கோவையில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்- பூசணிக்காய் வைத்து நூதனம்…

கோவையில் இரண்டாவது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பூசணிக்காய் வைத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் தொடங்கப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

Advertisement

தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், டி.பி.சி. பணியாளர்கள், மலேரியா தடுப்புப் பணியாளர்கள், சாக்கடை சுத்தம் செய்யும் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள் உள்ளிட்ட நீண்டகாலமாகப் பணிபுரியும் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2017ஆம் ஆண்டு அரசாணையின்படி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.798 ஊதியம் வழங்க வேண்டும். டி.பி.சி. பணியாளர்களைத் தனியார் தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைக்கும் மாநகராட்சி மன்றத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

Advertisement

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அமைதியான முறையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அறிவித்த அறிவிப்பு மறைக்கப்படுவதாகக் குற்றம்சாட்டும் வகையில், பூசணிக்காயை வைத்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

மாநகராட்சி நிர்வாகம் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சுமுகத் தீர்வு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Advertisement

இந்த வேலைநிறுத்தம் காரணமாகக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. கூட்டமைப்பில் இல்லாத பணியாளர்கள் மட்டுமே தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வழக்கத்தைவிடக் குறைவான பணியாளர்களே பணியில் ஈடுபட்டுள்ளதால், மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டு, தொய்வுடன் நடைபெற்று வருகின்றன.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அன்னூரில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு…

கோவை: அன்னூர் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...