கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வாங்காதவர்கள் கவனத்திற்கு…

கோவை: கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 1991 ஆம் ஆண்டு முதல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களின் சான்றிதழ்களை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.

கோயம்புத்தூர், மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர் ஐடிஐ, கோயம்புத்தூர்) 1991 ஆம் ஆண்டு முதல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களின் தொழிற்தேர்வு சான்றிதழ்கள் தற்போது வரை பயிற்சியாளர்களால் பெறப்படாமல் உள்ளன.

Advertisement

எனவே, பயிற்சியாளர்கள் தங்களது தற்காலிக தேசிய தொழிற்சான்றிதழ் (PNTC). தேசிய (NTC), COE (BBBT)/Advanced Module , BCC, ICT Academy சான்றிதழ், SCVT சான்றிதழ், MES TNSDC குறுகியகால பயிற்சி சான்றிதழ்களை 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளுப்படுகிறது.

இச்சான்றிதழ்கள் நீண்டகாலமாக பெறப்படாமல் உள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ்களை பொற்று செல்லவில்லையெனில் அரசு ஆவணகாப்பகத்தில் ஒப்படைக்கப்படும் எனவும், அதற்கு பின்பு சான்றிதழ் வேண்டிவருபவர்கள், சென்னையில் உள்ள அரசு ஆவணகாப்பகத்திற்கு நேரில் சென்று சான்றிதழ் பெற்றுச் செல்லும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Advertisement

தொழிற்சான்றிதழ்கள் பெறவரும் பயிற்சியாளர்கள், இங்கு பயிற்சி பெற்றமைக்கு ஆதரமாக கட்டணம் செலுத்திய இரசீதோ, நுழைவுசீட்டோ, அடையாள அட்டையோ அல்லது தற்காலிக தொழிற்சான்றிதழையோ தவறாமல் எடுத்துக்கொண்டு, வேலை நாள்களில் (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) வரும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அன்னூரில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு…

கோவை: அன்னூர் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...