அன்னூரில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு…

கோவை: அன்னூர் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தனப்பிரியா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் வெங்கட் உதவி நிர்வாக பொறியாளர் ராஜேஷ். அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜலட்சுமி, முத்துராஜ், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், அன்னூர் வட்டாட்சியர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின்போது. மாவட்ட ஆட்சித்தலைவர் முதலாவதாக ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட திட்டக்கூறு நிதியின்கீழ் ரூ.5.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அன்னூர் ஊராட்சி அலுவலக கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு, கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், முடிக்கப்பட்ட பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement

அடுத்ததாக, அமரர்.ஏ.முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, மாணாக்கர்களின் கல்வி கற்பித்தல் முறைகள் குறித்தும், தேர்ச்சி விகிதம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணாக்கர்களில் எவரேனும் இடைநிற்றல் ஆகியிருந்தால் அவர்களை மீண்டும் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர், பள்ளியில் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை உண்டு பார்த்து, உணவுப் பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அன்னூர் ஊராட்சி ஒன்றியம், அல்லப்பாளையம் ஊராட்சி, முல்லை நகரில் ரூ.38.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், குடியிருப்பின் அளவு மற்றும் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேலும், குடியிருப்புகளுக்கான பயனாளிகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை. இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பயனாளிகளின் பங்களிப்புத் தொகை செலுத்திய விவரங்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், அல்லப்பாளையம் மற்றும் தாசம்பாளையம் பகுதிகளில் செயல்படும் நியாய விலைக்கடைகளை நேரில் பார்வையிட்டு, அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் தரம், அளவு உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், தாசம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளுக்கு விநியோகிக்கும் யூரியா உள்ளிட்ட பொருட்களின் தரம் மற்றும் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும், இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, சூலூர் ஊராட்சி ஒன்றியம், பதுவம்பள்ளி ஊராட்சியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கு மற்றும் கருமத்தம்பட்டியில் செயல்படும் உணவுப் பொருள் சோதனைக் கூடத்திலும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள இனிப்புகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வாங்காதவர்கள் கவனத்திற்கு…

கோவை: கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 1991 ஆம் ஆண்டு முதல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களின் சான்றிதழ்களை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம். கோயம்புத்தூர், மகளிர் அரசு தொழிற்பயிற்சி...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...