முருக பக்தர்கள் விரும்பும் கந்த சஷ்டி விரதம்… அடுத்த நாட்களுக்கு இதை மறந்திடாதீங்க…!!

கோவை: கந்த சஷ்டி விரதத்தை முருகப் பக்தர்கள் இன்று முதல் துவங்கியுள்ள நிலையில், இந்த 6 நாட்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய பூஜை முறைகள், விரத முறைகள் பற்றி காணலாம்.

Advertisement

சஷ்டி விரதம்

வாழ்க்கையில் இருக்கும் தடைகளையும், எதிர்மறையான குணங்களை நீக்கவும், அறுபடை வீட்டுக்கு சொந்தக்காரனான ஆறுமுக நாயகன் முருகப் பெருமானை வேண்டி, கடைபிடிக்கப்படும் மிகவும் மகத்தான விரதம் தான் கந்த சஷ்டி விரதம். சூரபத்மனை வதம் செய்து அசுரர்களை அழித்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக, கடைபிடிக்கும் முக்கிய விரதமாக கந்த சஷ்டி விரதம் இருக்கிறது.

Advertisement

ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை தொடர்ந்து 6 நாட்கள் இந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படும். இந்தாண்டு தீபாவளி முடிந்து நவம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புகழ்பெற்ற முருகன் கோவில்களில் 5வது அல்லது 6ம் நாளில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். இதில், லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். 7ம் நாள் முருகன் – தெய்வானை திருக்கல்யாணம் நடக்கும். இந்த விஷேச நாட்களில் கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் மிகவும் கோலாகலமாக இருக்கும்.

இந்த விரத காலத்தின் போது, தொடர்ந்து 6 நாட்கள் மேற்கொள்ளப்படும் பூஜை முறைகள் மற்றும் மந்திரங்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.

Advertisement

விரத முறை

விரதத்தை துவங்குவதற்கு முன்பு உடலையும், மனதையும் தூய்மைப்படுத்துவது மிகவும் அவசியமாகும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, தலைக்கு குளித்துவிட்டு, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். முருகனப்பெருமானுக்கு உகந்த சிவப்பு மற்றும் பச்சை அல்லது மஞ்சள் கலர் ஆடைகளை அணிவது மிகவும் விஷேசமானது.

காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இல்லங்களின் அருகே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சகரின் திருக்கரங்களால் காப்பு கட்டிக் கொள்ளலாம். காப்பு கட்டிய பிறகு, விரத காலம் முடியும் வரை சிற்றின்பங்களை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.

கந்த சஷ்டி விரதமிருப்பவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி, மனதார முருகனை வேண்டி,கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். வேண்டுதலுக்கு ஏற்றவாறு, திருப்புகழை தினமும் காலை, மாலை இருவேளைகளில் தலா 3 முறை சொல்லி வழிபாடு நடத்தப்படலாம்.

கந்த சஷ்டி விரதம் என்பது சாதாரண விரதமல்ல. நமக்குள்ளே இருக்கும் அசுரப் பண்புகளை அழித்து, இறை குணங்களை அடையும் ஒரு புனிதமான அகப்போர் ஆகும். நம் மனதிற்குள் உறைந்து இருக்கும் தீய குணங்களை அறுப்பதே இந்த விரதத்தின் நோக்கமாகும்.

வீட்டு வழிபாடு எப்படி

வீட்டில் இருக்கும் பூஜையறையை தூய்மைப்படுத்தி, முருகன் படத்திற்கு மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும்.

இரு நெய் தீபங்களை ஏற்றி, முருகனின் அருள் இல்லத்தில் நிறைய வேண்டுதல் வேண்டும்

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் அல்லது திருப்புகழ் ஆகிய திருமுறைகளை தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பாராயணம் செய்தல் வேண்டும்

உணவு முறை

கந்த சஷ்டி விரத காலதில் உடலின் தன்மைக்கு ஏற்றவாறு உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும். கர்ப்பிணிகள், நோயாளிகள், வயதானவர்கள் முடிந்த வரை விரதத்தை தவிர்ப்பது நல்லது.

கடும் விரதம்;இந்த 6 நாட்களும் நீர் மட்டுமே அருந்தி அல்லது ஏதும் அருந்தாமல் கடைபிடிக்கும் விரதமாகும்.

பழம் – பால் முறை; ஒரு வேளை அல்லது இருவேளை பால் மற்றும் பழங்கள் மட்டும் உட்கொண்டு இருக்கும் விரதமாகும்.

ஒருவேளை உணவுமுறை; பகலில் மட்டும் உப்பு குறைந்த, காரம் இல்லாத எளிய சைவ உணவை ஒரு வேளை மட்டும் உண்ணலாம். உதாரணமாக, பச்சரிசி சாதம், தயிர் சாதம், ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகள்)

பலன்கள்

குடும்பத்தில் நிலவி வரும் துன்பங்கள், கடன்கள் மற்றும் நமக்கு தீமை நினைப்பவர்களின் தொல்லைகள் நீங்கும்.

மன தைரியம், அமைதி கிடைப்பதுடன், நல்ல வாழ்வு கிடைக்க வழிவகுக்கும்.

திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு மற்றும் திருமணம் தடைபட்டு போகுபவர்களுக்கு, அந்தத் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும்.

Flipkart Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

அன்னூரில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு…

கோவை: அன்னூர் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...