கோவை: பிஎஸ்ஜி மருத்துவமனையின் 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று (நவம்பர் 11) தொடங்குகிறது.
பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவமனையின் ‘பி’ பிளாக்கில் நவம்பர் 18-ஆம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் முகாமில் பங்கேற்கலாம்.
பொது மருத்துவம், கண் மருத்துவம், புனர்வாழ்வு மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் இலவச ஆலோசனை வழங்குகின்றனர். முகாமில் பங்கேற்பவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசோதனைத் தொகுப்புகள் 50 முதல் 70 சதவீத சலுகையில் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரத்தச் சர்க்கரை, கொழுப்பு அளவு, இ.சி.ஜி., மார்பு எக்ஸ்ரே உள்ளிட்ட பொதுமருத்துவப் பரிசோதனைகள் அடங்கிய தொகுப்புக்கு ரூ.499 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கண் அழுத்தப் பரிசோதனை, கண் விழித்திரைப் புகைப்படம், ஓ.சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட கண் பரிசோதனைத் தொகுப்பு ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கான பாத மதிப்பீடு மற்றும் எம்.சி.ஆர். காலணிகள் அடங்கிய தொகுப்புக்கு ரூ.540 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல் அகற்றுதல் மற்றும் ஓ.பி.ஜி. எக்ஸ்ரே அடங்கிய பல் மருத்துவத் தொகுப்பு ரூ.299-க்கு வழங்கப்படுகிறது.
இலவச ஆலோசனை முகாம் நவம்பர் 18 வரை நடைபெறும். சலுகைக் கட்டணப் பரிசோதனைகளை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நவம்பர் 25-ஆம் தேதி வரை செய்துகொள்ளலாம்.
முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 82200 13330, 95009 48104, 87540 22880 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
Free diabetes and blood pressure consultation camp at PSG Hospitals in Peelamedu, Coimbatore.






