அமைச்சர் விஜயபாலாஜி மீதான விமர்சனம்- அமைச்சர் சம்பத்குமார் அளித்த பதில்…

கோவை: அமைச்சர் விஜய பாலாஜி மீதான விமர்சனம் முகாந்திரம் இல்லாதது என்று அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினார். இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சம்பத்குமார், பள்ளி பருவத்திலேயே ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளதாகவும் அதனால் மாணவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

Advertisement

பொதுமக்கள் பலரும் ஹெல்மெட் அணியாதது ஒரு பேஷன் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவ்வாறு இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது விமர்சனங்கள் எழுவது குறித்தான கேள்விக்கு யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

அமைச்சர் விஜய பாலாஜி காவல் கண்காணிப்பாளரை இரவு நேரத்தில் வீட்டில் அழைத்து பேசியது என்று சர்ச்சை கிளப்பியுள்ள கேள்விக்கு அது முகாந்திரம் இல்லாத தகவல் என்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...