கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.21 கோடியில் கட்டப்பட்ட மாணவர் விடுதி திறப்பு

கோவை: கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.21 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மாணவர் விடுதிக் கட்டடத்தை தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உயர்கல்வித் துறையின் சார்பில் கட்டப்பட்ட மாணவர் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் குத்துவிளக்கேற்றி, விடுதிக் கட்டடத்தை பார்வையிட்டார்.

தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மூன்று தளங்களைக் கொண்ட இந்த விடுதிக் கட்டடத்தில் மாணவர்கள் தங்குவதற்கான அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

தரைத்தளத்தில் 32 மாணவர்கள் தங்கும் அறைகள், சமையலறை, விடுதிக் காப்பாளர் அறை, உணவருந்தும் அறை, சரக்கு அறை மற்றும் 4 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 35 மாணவர்கள் தங்கும் அறைகள், படிப்பறை, தொலைக்காட்சிக் கூடம் மற்றும் 4 கழிவறைகள் உள்ளன. இரண்டாம் தளத்தில் 35 மாணவர்கள் தங்கும் அறைகள், படிப்பறை மற்றும் 4 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரேவதி, கல்லூரி முதல்வர் முனைவர் புருசோத்தமன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...