கோவை: கார்த்திகை நேற்று பிறந்துள்ள நிலையில், 2026 இறுதி மற்றும் 2027ல் சபரிமலையில் நிகழும் சிறப்பு பூஜைகள், விசேஷ நிகழ்வுகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாகவும், இறை வழிபாட்டிற்கு உகந்த மாநிலமாகவும் இருப்பது கார்த்திகை தான். இந்த மாதம் பிறந்தாலே, திரும்பும் பக்கம் எல்லாம் சரண கோஷமாகத்தான் இருக்கும். கார்த்திகை மாதம் தான் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதமாகும்.

வருடம்தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் துளசி, ருத்ராட்சை மாலை அணிந்து, ஐயப்பனை வேண்டி, 48 நாட்கள் விரதத்தை துவங்குவார்கள்.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்த மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளில் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஒரு மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு வருவார்கள். குறிப்பாக, கேரளாவின் அண்டை மாவட்டமான கோவையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்வார்கள். நகர்ப்பகுதியில் அமைந்துள்ள சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் இந்த மாதம் முழுவதும் மிகவும் விசேஷமாக இருக்கும். மாலை அணிபவர்கள், கட்டு கட்டி கோவிலுக்கு செல்பவர்கள் என தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இந்த நிலையில், இந்தாண்டுக்கான சபரிமலை சன்னிதானம் நடை திறப்பு, அடைப்பு தேதிகள் பற்றிய முழுவிபரத்தை தற்போது காணலாம். மேலும், மாதாந்திர பூஜைகள், சிறப்பு பூஜைகள், மண்டல பூஜை, மகர விளக்கு விழா தொடர்பான விபரங்களையும் விரிவாக பார்க்கலாம்.
நிகழ்வுகள்/ பூஜைகள் – கோவில் நடை திறப்பு – நடை அடைப்பு
மண்டல பூஜை மஹோத்ஸவம் – நவ.,16 – டிச.,27
மண்டல பூஜை மஹோத்ஸவம் – டிச.,27 – டிச.,27
மகர விளக்கு மஹோத்ஸவம் – டிச.,30 – ஜனவரி 20
மகர விளக்கு தரிசனம் – ஜனவரி 14
மாதாந்திர பூஜை (மாசி) – பிப்.,12 – பிப்.,17
மாதாந்திர பூஜை (பங்குனி) – மார்ச் 14 – மார்ச் 19
சபரிமலை உற்சவம் – மார்ச் 12 – மார்ச் 22
கொடியேற்றம் – மார்ச் 13
பள்ளிவேட்டை – மார்ச் 21

பங்குனி உத்திரம் மற்றும் ஆராட்டு விழா – மார்ச் 22
விஷூ திருவிழா – ஏப்.,10 – ஏப்.,19
விஷூ பூஜை – ஏப்.,15
மாதாந்திர பூஜை (சித்திரை) – ஏப்.,14 – ஏப்.,19
மாதாந்திர பூஜை (வைகாசி) – மே 14 – மே 19
சிலை பிரதிஷ்டை பூஜை – ஜூன் 12 – ஜூன் 13
மாதாந்திர பூஜை (ஆனி) – ஜூன் 15 – ஜூன் 20
மாதாந்திர பூஜை (ஆடி) – ஜூலை 16 – ஜூலை 21
மாதாந்திர பூஜை (ஆவனி) – ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 22
ஓணம் – செப்., 10 – செப்., 14
ஓணம் பூஜை – செப்., 12 – ஜூன் 13
மாதாந்திர பூஜை (புரட்டாசி) – செப்., 17 – செப்., 22
மாதாந்திர பூஜை (ஐப்பசி) – அக்.,17 – அக்., 22

ஸ்ரீசித்திரை ஆட்ட திருநாள் – அக்.,10 – அக்.,20
மண்டல பூஜை மஹோத்ஸவம் (கார்த்திகை) – நவ.,16 – டிச.,27
மண்டல பூஜை மஹோத்ஸவம் – டிச.,27 – டிச.,27
மகர விளக்கு மஹோத்ஸவம் – டிச.,30
மகர விளக்கு தரிசனம் – ஜனவரி 14


