தனுஷின் ‘O.M’ திரைப்படம் வெளியீடு – பட்டாசு வெடித்து, ஆடல் பாடலுடன் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்…

கோவை: O.M திரைப்பட 6 மணி காட்சி வெளியானதை ரசிகர்களும் நற்பணி இயக்கத்தினரும் கோலாகலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘O.M’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு, கோவையில் அவரது ரசிகர்களும் தனுஷ் நற்பணி இயக்கத்தினரும் பட்டாசு வெடித்து, ஆடல் பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

தமிழக அரசு அதிகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் காலை 6 மணிக்கே திரைப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கங்கா திரையரங்கில் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் சிறப்புக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, ரசிகர்கள் ஒரே மாதிரியான டி-ஷர்ட்களை அணிந்து, டிஜே இசைக்கு நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும், பட்டாசு வெடித்தும், தனுஷின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும் திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடினர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் திரைப்படம் அதிகாலை காட்சியுடன் வெளியானது அவரது ரசிகர்களிடையே, குறிப்பாக தனுஷ் நற்பணி இயக்கத்தினரிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கங்கா திரையரங்கப் பகுதி ரசிகர்களின் கொண்டாட்டத்தால் களைகட்டியது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...