பெண் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கோவை தனுஷ் நற்பணி இயக்க பெண் நிர்வாகி

கோவை: ஆதரவற்ற பெண் குழந்தைகளை OM திரைப்படத்தை காண்பதற்கு அழைத்து வந்த பெண் நிர்வாகியால் குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

நடிகர் தனுஷ் தயாரிப்பிலும் நடிப்பிலும் பிரம்மாண்டமாய் உருவாகிய ஓம் திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கோவையில் தனுஷ் நற்பணி இயக்க கோவை தெற்கு மாவட்ட மகளிரணி இணை செயலாளர் ராஜேஸ்வரி 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகளை காந்திபுரம் பகுதியில் உள்ள கற்பகம் திரையரங்கிற்கு அழைத்து வந்து மகிழ்ச்சி அடைய செய்தார்.

பிரபல நடிகர்கள் தனுஷ், மம்முட்டி மற்றும் நடிகை சாய்பல்லவி ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள ஓம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அந்த திரைப்படத்தை கோவை தெற்கு மாவட்ட தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி இணை செயலாளர் ராஜேஸ்வரி ஏற்பாட்டில் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள 50 பெண் குழந்தைகளுக்கு திரைப்படத்தை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

அதனடிப்படையில் கோவை கவுண்டம்பாளையம் மற்றும் போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் 50 சிறுமிகள் காப்பக நிர்வாகிகளுடன் பாதுகாப்பாக தனி வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கபட்டது.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கற்பகம் திரையரங்க வளாகத்தில் ஓம் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

முன்னதாக திரையரங்க வளாகம் முன்பாக குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த ராஜேஸ்வரி, அவர்களுக்கு கேக் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...