கோவை: 50 மீ, 100 மீ ஓட்டத்தில் 2.5 வயது கோவை சிறுவன் உலக சாதனை. 280 வார்த்தைகளை நினைவில் கொண்டும் மேலும் ஒரு சாதனை, கிங்டம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து மெடல் சான்றிதழ் வழங்கியுள்ளது.
50 மீ தடகள ஓட்டம் 16 விநாடிகளிலும், 100 மீ தடகள ஓட்டம் 36 விநாடிகளிலும் கடந்து கோவையைச் சேர்ந்த 2 வயது 5 மாதமே ஆன பா தேவமித்ரன் என்ற சிறுவன் சாதனை. மேலும் 280 வார்த்தைகளை நினைவில் கொள்ளுதல் உள்ளிட்ட 3 உலக சாதனைகளை படைத்துள்ளார். இவரது சாதனையை கிங்டம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கவுரத்துள்ளனர்.
கோயம்புத்தூர் கணபதி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் யாழினி தம்பதியினர் இவர்களது மகன் பா. தேவமித்ரன். இவருக்கு வயது 2 வயது 5 மாதங்கள் ஆகிறது.
இந்த நிலையில் 50 மீட்டர் தடகள ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று வெறும் 16 விநாடிகளில் கடந்தும், 100 மீட்டர் தடகள ஓட்டப் பந்தயத்தை 36 விநாடிகளிலும் கடந்து உலக சாதனை படைத்துள்ளார் பா. தேவமித்ரன். மேலும் 280 வார்த்தைகளை நினைவில் கொள்ளுதல் உள்ளிட்ட 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
தனது 2 வயது 5 மாதமே ஆன மிகச் சிறிய வயதில், 50 மீட்டர், 100 மீட்டர் தடகள ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, அதனை வெறும் 16 மற்றும் 36 வினாடிகளில் கடந்த அசாதாரண சாதனையைப் பாராட்டி, ‘கிங்டம் உலக சாதனை’நிறுவனம் அவருக்கு பாராட்டுச் சான்றிதழும், தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்துள்ளது.
இது குறித்து அவரது பெற்றோர் கூறும்போது சிறுவயதிலேயே புரிய வைத்து இந்த சாதனையை படைக்க வைத்தது மிகவும் பெருமையாக உள்ளது என்றும், மற்ற பெற்றோர்களும் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே புரிய வைத்து பல சாதனைகளை படைக்க வேண்டும். அவனது பெற்றோர் என்பதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றனர். அவனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எங்களை இது போன்ற இடத்தில் கொண்டுவந்துள்ளதிற்கு என்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சாதனை சிறுவனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.


