கோவை: பேரூர் ஓட்டத்தில் நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், தீத்திபாளையம் கிராமம், புது ரோடு, அலோட்டஸ் மஹாலில் நாளை 25.11.2026 காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 25.11.2026 அன்று பேரூர் வட்டம், தீத்திபாளையம் கிராமம், புது ரோடு, லோட்டஸ் மஹாலில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்க உள்ளார்.
இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இப்பகுதி பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் , தெரிவித்துள்ளார்.


