ஓட்டம், வாத்தை ஞாபகத்தில் கோவை சிறுவன் உலக சாதனை- அமைச்சர் வாழ்த்து…

கோவை: 50 மீ, 100 மீ ஓட்டத்தில் 2.5 வயது கோவை சிறுவன் உலக சாதனை. 280 வார்த்தைகளை நினைவில் கொண்டும் மேலும் ஒரு சாதனை, கிங்டம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து மெடல் சான்றிதழ் வழங்கியுள்ளது.

50 மீ தடகள ஓட்டம் 16 விநாடிகளிலும், 100 மீ தடகள ஓட்டம் 36 விநாடிகளிலும் கடந்து கோவையைச் சேர்ந்த 2 வயது 5 மாதமே ஆன பா தேவமித்ரன் என்ற சிறுவன் சாதனை. மேலும் 280 வார்த்தைகளை நினைவில் கொள்ளுதல் உள்ளிட்ட 3 உலக சாதனைகளை படைத்துள்ளார். இவரது சாதனையை கிங்டம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கவுரத்துள்ளனர்.

கோயம்புத்தூர் கணபதி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் யாழினி தம்பதியினர் இவர்களது மகன் பா. தேவமித்ரன். இவருக்கு வயது 2 வயது 5 மாதங்கள் ஆகிறது.

இந்த நிலையில் 50 மீட்டர் தடகள ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று வெறும் 16 விநாடிகளில் கடந்தும், 100 மீட்டர் தடகள ஓட்டப் பந்தயத்தை 36 விநாடிகளிலும் கடந்து உலக சாதனை படைத்துள்ளார் பா. தேவமித்ரன். மேலும் 280 வார்த்தைகளை நினைவில் கொள்ளுதல் உள்ளிட்ட 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

Advertisement

தனது 2 வயது 5 மாதமே ஆன மிகச் சிறிய வயதில், 50 மீட்டர், 100 மீட்டர் தடகள ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, அதனை வெறும் 16 மற்றும் 36 வினாடிகளில் கடந்த அசாதாரண சாதனையைப் பாராட்டி, ‘கிங்டம் உலக சாதனை’நிறுவனம் அவருக்கு பாராட்டுச் சான்றிதழும், தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்துள்ளது.

இது குறித்து அவரது பெற்றோர் கூறும்போது சிறுவயதிலேயே புரிய வைத்து இந்த சாதனையை படைக்க வைத்தது மிகவும் பெருமையாக உள்ளது என்றும், மற்ற பெற்றோர்களும் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே புரிய வைத்து பல சாதனைகளை படைக்க வேண்டும். அவனது பெற்றோர் என்பதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றனர். அவனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எங்களை இது போன்ற இடத்தில் கொண்டுவந்துள்ளதிற்கு என்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சாதனை சிறுவனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Coimbatore tourism 2026: கோவையில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

கோவையில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் 2026 – செம்மொழிப் பூங்கா, பெரியார் அறிவுலகம், பேரூர் கோயில், கோவை குற்றாலம், வால்பாறை, மேட்டுப்பாளையம் மலை ரயில் வரை ஒரு சுற்றுலா வழிகாட்டி.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...