லட்சியம், நம்பிக்கை இருக்கு… நம்மிடம் என்ன இல்லை? கோவையில் விஜய் பேச்சு

கோவை: மனதில் நேர்மை இருக்கிறது, கறை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும், லட்சியமும் இருக்கிறது. உழைக்க தெம்பு இருக்கிறது என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிப் பட்டறை கோவை சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் நீண்ட நேரம் உரையாற்றினர். சுமாராக 3 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், த.வெ.க தலைவர் விஜய், 4 நிமிடங்களுக்கும் குறைவாகவே பேசினார்.

அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

கோவை என்றாலே மரியாதை தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். என் நெஞ்சில் குடியிருக்கும் கோவை மக்களுக்கும், என் தோழர்களுக்கும் வணக்கம்.

பூஜ் ஏஜென்ட் பயிற்சிப் பட்டறை என்ற பெயரில் இங்கு பெரிய ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது போல் உள்ளது. பூத் லெவல் ஏஜென்ட் நிகழ்ச்சி என்றாலே ஓட்டு சம்மந்தப்பட்டது தானே இருக்கும். என்ன பொறுத்த வரைக்கும் இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கிற ஒரு மீட் கிடையாது.

என்னடா இவர் இப்படி சொல்லிட்டாரு? அப்படின்னு நீங்க நினைக்கலாம். நம்ம தேர்தல் அரசியலில் தானே இருக்கோம். இவர் ஏன் இப்படி சொன்னாரு? அப்படின்னு உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.

அதுல தப்பு இல்ல. ஏன்னா ஆட்சி அதிகாரம்னாலே அது ஓட்டு சம்பந்தப்பட்டது தானே. இல்லைன்னு சொல்லல. நம்ம ஆட்சிக்கு என்ன செய்ய போறோம்?

இதுவரைக்கும் பண்ண மாதிரி எல்லாம் நாம பண்ணப் போறது இல்ல. நம்ம ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறதே மக்களுக்காகத் தான். மக்களோட நலனுக்காகத் தான்.

இந்த பயிற்சியில் மக்கள் கிட்ட இருந்து எப்படி நாம எப்படி ஓட்டு வாங்க போறோம் அப்படிங்கறத பத்தி மட்டுமே பேச போற ஒரு பயிற்சிப் பட்டறை கிடையாது. அது முக்கியம் தான் நான் இல்லைன்னு சொல்லல.

அதையும் தாண்டி மக்களோட நாம எப்படி கனெக்டா இருக்க போறோம். மக்களோட மக்களா எப்படி ஒன்றிணைய போறோம்? அப்படிங்கறத பத்தி டிஸ்கஸ் பண்றதுக்காக தான் இந்த பயிற்சிப் பட்டறை.

இதுக்கு முன்னாடி நிறைய பேர் வந்து இருக்கலாம், போய் இருக்கலாம், நிறைய பொய்களைச் சொல்லி இருக்கலாம், மக்களை ஏமாற்றி இருக்கலாம். இதெல்லாம் செஞ்சு ஆட்சியை பிடிச்சிருக்கலாம்.

அதெல்லாம் பழைய கதை. அதுக்கெல்லாம் நான் இங்க வரல. இனிமே அதெல்லாம் நடக்காது. நடக்க விட போறதும் கிடையாது.

நம்ம கட்சி மேல மக்கள் கிட்ட ஒரு பெரிய நம்பிக்கையை கொண்டு வரப் போறது தேர்தல் களப்பணியில் பூத் லெவல் ஏஜென்டான நீங்க தான். நீங்க ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு போர் வீரனுக்கு சமம்.

நாம் ஏன் வந்து இருக்கோம்? எதற்கு வந்திருக்கோம்? எப்படிப்பட்ட ஆட்சியை அமைக்கப்போறோம் என்பதை மக்கள் கிட்ட போய் சொல்லுங்க.

கண்டிப்பா கேட்பாங்க, “உங்களுக்கென்ன அரசியல் அனுபவம்” இருக்குன்னு கேட்பாங்க.

ஆனா நீங்க யாரு? உங்கள் கெப்பாசிட்டி என்னன்னு எனக்குத் தெரியும். நம்ம கிட்ட என்ன இல்ல? மனசில் நேர்மை இருக்கு, கறைபடியாத அரசியல் செய்யணும்னு நம்பிக்கை இருக்கு, லட்சியம் இருக்கு, உழைக்கத் தெம்பு இருக்கு, பேசுறதுக்கு உண்மை இருக்கு, செயல்படத் திறமை இருக்கு, அர்ப்பணிப்பு குணம் இருக்கு களம் ரெடியா இருக்கு.

இதுக்கு மேல என்ன வேணும்? போய் கலக்குங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.

இவ்வாறு விஜய் பேசினார்.

கோவையில் முதன் முறையாக விஜய்யின் அரசியல் பேச்சு எப்படி இருக்கிறது என்று நமது நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் கருத்துக்கணிப்பில், வாசகர்கள் தங்கள் கருத்தை பதிவிடுங்கள். த.வெ.க தலைவரிடமும், அவரது அணியினரிடமும் கொண்டு சேர்க்கலாம்.

உங்கள் கருத்தை பகிர 👇

இந்த லிங்கில் உங்கள் ஸ்டாரை வழங்குகள் https://whatsapp.com/channel/0029VaBGFq7JZg4EvHELBx3R

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு சிலைகள் மூடல், பேனர்கள் அகற்றல், பறக்கும் படை வாகனங்கள் துவக்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.