கோவையில் கடைகளை குறிவைத்து திருட்டு: வியாபாரிகள் ஷாக்

கோவை: கோவையில் மளிகை கடை, பேக்கரிகளை குறிவைத்து கொள்ளை சம்பவம் நடைபெறுவது வியாபாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கோவை ரங்கே கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மங்கைலால் (62). இவர் ஆர்.ஜி வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார்.

Advertisement

மறுநாள் காலை மளிகை கடைக்கு அருகில் கடை நடத்தி வரும் ஒருவர் மங்கைலாலுக்கு போன் செய்து மளிகை கடையின் பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மங்கைலால் உடனே கடைக்கு வந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையின் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மங்கைலால் வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

Advertisement

தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து மங்கைலால் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி திருடனை தேடி வருகின்றனர்.

Advertisement

கடந்த 4ம் தேதி இதேபோல கணபதியில் முதியவர் நடத்தி வரும் பேக்கரியின் ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் திருட்டு போனது. இதனால் போலீசார் பேக்கரி, மளிகை கடையை குறி வைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடி வருகிறார்களா? ஒரே கும்பல் திருட்டில் ஈடுபட்டு வருகிறதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அன்னூரில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு…

கோவை: அன்னூர் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...