கோவை வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வரவேற்பை பெற்று கொண்டார்

கோவை: கோவை வந்தடைந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது…

ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை வந்தடைந்தார்.

அவருக்கு தி.மு.க வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஈரோடு, சேலம் மாவட்டங்களுக்கு பயணம் செல்கிறார். இதற்காக விமானம் மூலம் அவர் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

இதை அடுத்து, அவர் கார் மூலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு புறப்பட்டு சென்றார். நாளை சேலம் செல்லும் அவர், மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.