கோவையில் மேற்கொள்வது பசுமை வழி சாலை அல்ல- விவசாயிகள் கூறுவது என்ன?

கோவை: கோவையில் மேற்கொள்ளப்படுவது பசுமை வழி சாலை அல்ல என்றும் பசுமை அழிப்பு சாலை என்றும் கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆவேசமாக சாடியுள்ளனர்…

கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவை பத்திரக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள்,

கோவை-சக்தி பசுமை வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்த திட்டத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டால் 70 சதவீத விவசாயிகள் பாதிக்கபடுவர் என்றும் சுற்று சூழலும் பாதிக்கப்படும் என்றனர். விவசாய நிலத்தை எடுக்காமல் அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மாவட்ட திட்ட குழு, சாலை பாதுகாப்பு குழுவில் விவசாயிகள் யாரும் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து விவசாய சங்க பிரதிநிதிகளை குழுவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நகரத்தில் பொது போக்குவரத்து மெட்ரோ, பாலங்கள் இருப்பது போல் கிராமத்திற்கு விரிவுப்படுத்த கடைப்பிடிக்க வேண்டும் என்றனர். கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு திட்டங்களை செயல்படுத்துவது போலவே தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement

5 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைவழிச் சாலைக்கு எந்த ஒரு முன்னேறிவிப்பும் இல்லாமல் விவசாய நிலத்தை அளவீடு செய்ததாகவும் விவசாயம் அழியும் பட்சத்தில் அந்த சாலை தேவை இல்லை என அப்போதைய அரசாங்கம் நிறுத்தி வைத்தனர் என்றும் கூறிய அவர்கள் இப்போது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி நான்கு வருடமாக விவசாயிக்கு தொந்தரவு செய்து வருகின்றனர் என கூறினர். இருக்க கூடிய பழைய சாலையையே விரிவுப்படுத்தவதற்கு போதுமான இடம் உள்ளதாகவும் இது பசுமைவழிச் சாலை அல்ல பசுமை அழிப்பு சாலை என சாடினர்.

தொழில் அதிபர்கள் வாங்கி போட்டுள்ள பண்ணை வீடுகளுக்கு விரைவாக சென்று வர வேண்டும் என திட்டமிடுகின்றனர் என்றும், சுங்க சாவடி அமைத்து மக்கள் பணத்தை சுரண்டுவதற்கு இந்த தேவையில்லாத திட்டம் என்றும் சாடினர். இந்த பசுமைவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் பல உயிர்களை மாய்த்து கொள்வோம் என தெரிவித்தனர்.

Advertisement

இந்தக் கூட்டமைப்பில் இந்த பிரச்சனை சம்பந்தமாக கொங்கு மண்டலத்தில் பசுமை வழி சாலை திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது, விவசாய நிலங்களின் பரப்பளவை குறைக்காத நிலையான உள்கட்ட அமைப்பு மேம்பாடு, பசுமை வழி திட்டங்களுக்கு உள்ள சுய ஆதாயத்தினரை விழிப்புணர்வுகள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரவுடிகளுக்கு செக் வைத்த கோவை போலீஸ்; 940 பேர் கண்காணிப்பில்

கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 940 ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், நடப்பாண்டில் 57 ரவுடிகள் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...