கோவையில் த.வெ.க அலுவலகத்தில் பாட்டிலுக்குள் விஜய் ஓவியம்!

கோவை: த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் விஜய்யின் ஓவியத்தை பாட்டிலில் வரைந்து அசத்தியுள்ளார் ஓவியக் கலைஞர் யு.எம்.டி.ராஜா.

தமிழக வெற்றிக் கழகத்த்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் 51வது பிறந்த நாள் விழா வரும் 22ம் தேதி அன்று, கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது கட்சித் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 88வது வார்டு குனியமுத்தூர் த.வெ.க அலுவலகத்தில்,கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், இணைச் செயலர் பூ மார்க்கெட் சரவணன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், ஓவியக்கலைஞர் யு.எம்.டி ராஜா, விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு செய்யும் விதமாக கண்ணாடி பாட்டிலின் உள் பகுதியில் விஜய்யின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இந்த ஓவியத்தை வரைய 10 மணி நேரம் எடுத்துக்கொண்ட ஓவியர் யு.எம்.டி ராஜா, தூரிகையை வளைத்து பாட்டிலின் உள்ளே நுழைத்து வண்ணம் தீட்டி, அது காய்ந்த பிறகு மேலும் வண்ணம் தீட்டி விஜய்யின் ஓவியத்தை வரைந்து உள்ளார். மேலும், த.வெ.க கொடியில் உள்ள நிறங்களையும் பாட்டிலினுள் தீட்டியுள்ளார்.

இதுகுறித்து, 88-வது வார்டு த.வெ.க. செயலாளர் நவீன்ராஜ் கூறுகையில், எங்கள் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் 750 பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விஜய்யின் ஓவியத்தை பாட்டிலில் வரைந்து அசத்திய ஓவியர் யு.எம்.டி. ராஜாவை கவுரவப்படுத்தியுள்ளோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், கோவை 88வது வார்டு நிர்வாகிகள் ராமலிங்கம், கார்த்திக், செந்தில்குமார், விக்னேஷ், முகேஷ், கவின், ராகுல், ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை தருவது நிறுத்தி வைக்கப்பட்டது…

கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.