கோவை, திருப்பூர் வழியாக ஹைதராபாத் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் நீட்டிப்பு!

கோவை: கோவை, திருப்பூர் வழியாக ஹைதராபாத் வரை இயக்கப்படும் ஹைதராபாத்-கொல்லம் சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

போக்குவரத்து அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 07193 ஹைதராபாத்-கொல்லம்; வரும் ஜூலை 5ம் தேதி முதல் 26ம் தேதி வரை (ஒவ்வொரு சனிக்கிழமையும்) ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.10 மணிக்குப் புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 7.10 மணிக்குக் கொல்லம் ரயில் நிலையத்தை அடையும்.

Advertisement

வண்டி எண் 07194 கொல்லம் – ஹைதராபாத்; ஜூலை 7ம் தேதி முதல் 28ம் தேதி வரை (ஒவ்வொரு திங்கட்கிழமையும்) கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் ரயில் நிலையத்தை அடையும்.

முக்கிய நிறுத்தங்கள் மற்றும் நேரம்:-

Advertisement
  • ஜோலார் பேட்டை: மாலை 5.55 / 6.00
  • சேலம்: மாலை 7.22 / 7.25
  • ஈரோடு: இரவு 8.20 / 8.30
  • திருப்பூர்: இரவு 9.13 / 9.15
  • போத்தனூர்: இரவு 11.00 / 11.02

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

  • போத்தனூர்: மாலை 6.20 / 6.22
  • திருப்பூர்: மாலை 7.18 / 7.20
  • ஈரோடு: இரவு 8.20 / 8.30
  • சேலம்: இரவு 9.27 / 9.30
  • ஜோலார் பேட்டை: இரவு 11.55 / 12.05

இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.