கோவை: கோவையில் இன்று நடைபெற்ற புறா பறக்கவிடும் போட்டியில் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது புறாக்களை பறக்கவிட்டு பரிசுகளைத் தட்டிச்சென்றனர்.
கோவை மாவட்டத்தில் புறா பந்தயங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமான புறா ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பந்தயங்கள் நடத்தப்பட்டு, சிறப்பாக பறந்த புறாக்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கோவை மாவட்டம் முழுக்கவே பல கிராமங்களில் தொன்றுத், தொட்டே பந்தயப் புறாக்களை வளர்க்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள். அதில் புலியகுளம், செல்வபுரம் போன்ற மாநகரப் பகுதிகளிலும் அதிகமான புறாக்கள் உண்டு.
பந்தயப் புறாக்கள்
பந்தயப் புறாக்களைப் பொறுத்தவரைத் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமே பெரிய அளவில் வளர்க்கப்படுகின்றன.
வீட்டில் வளர்க்கப்படும் புறாக்களை வைத்து ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்கள் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் கோவை மாநகரில் புறா பந்தயங்கள் நடத்துவது வழக்கம்.
100 கிலோ மீட்டர், 200 கிலோ மீட்டர், 1,000 கிலோ மீட்டர் தூரம் என்ற போட்டிகளை புறக்காளை பறக்கவிடுவர். வீடு வந்து சேரும் புறாக்களை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதேபோல் நீண்ட நேரம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டு இருக்கும் புறாக்கள் போட்டியும் உள்ளது.
கரண புறா பந்தயத்தில், புறா பல்டி அடிக்கும். எத்தனை பல்டி அடித்தது என்பதை வைத்து, வெற்றியை அறிவிப்பார்கள்.
பந்தய தினம்
அதன்படி, பந்தய தினமான இன்று இளைஞர் புறாக்களை பந்தயம் விடும் ரத்தினபுரி பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு புறாக்களுக்கு டேக் போட்டு, நம்பர் கொடுத்தனர்.
பின்னர் பல்வேறு பிரிவுகளின் கீழ் புறாக்களை பறக்கவிட்டனர். இதில் வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.