கோவை: ரயில்வே துறையின் பராமரிப்பு பணிகள் காரணமாக, சில முக்கிய ரயில்கள் தற்காலிகமாக மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களில் பாயிண்ட் மற்றும் கிராசிங் பகுதிகளில் பரிசோதனை மற்றும் பழுது பார்க்கும் பணி நடைபெற இருப்பதால், ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில் இரண்டு ரயில்கள் பாதை மாற்றங்களுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வண்டி எண் 18190 – எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ் வழக்கமாக போத்தனூர் – இருகூர் வழியாக செல்லும். ஆனால் ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில், இந்த ர்யைல் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து – கோவை ஜங்க்சன் மற்றும் இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும்.
Advertisement

வண்டி எண் 13352 – ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் இந்த ரயில், ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில், போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கோவை ஜங்ஷனுக்கு வராது.
பயணிகள் தங்கள் பயண்த் திட்டங்களை இந்த மாற்றங்களை பொருத்து தயார் செய்து கொள்ள ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.