கோவை; நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்.
கோவையில் நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி கொண்டாடினர்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா, இன்று ஜூலை 23ஆம் தேதி தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவருக்கு ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோவையில், கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது..
தொடர்ந்து, குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள ஒருவருக்கு உதவி தொகை வழங்கினர்..
முன்னதாக, மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், பகவதி, விஜய் உள்ளிட்ட பலர், கோணியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தனர்..
மேலும் வடவள்ளி பாரத அன்னை இல்லத்தில் மதிய உணவு,கண் பார்வையற்ற 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்..