கோவையில் சிற்பி எஸ்தெடிக்ஸ் ஸ்கேன்ஸ் & கிளினிக் துவக்கம்!

கோவை: கோவை பீளமேட்டில், அவிநாசி சாலையில் அமைந்துள்ள முன்னணி அழகுசாதன அறுவை சிகிச்சை மையமான சிற்பி எஸ்தெடிக்ஸ், தனது வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த கட்டமாக சிற்பி ஸ்கேன்ஸ் மற்றும் சிற்பி கிளினிக் ஆகியவற்றைத் திறந்து வைத்துள்ளது.

பெண்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி, உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான சேவைகளை வழங்கும் நோக்கில், இந்த புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் பழனிவேலு, பாப் பிக்சல் நிறுவனத்தின் சங்கீதா பீட்டர் ஆகியோர் இணைந்து, சிற்பி எஸ்தெடிக்ஸ் நிறுவனர் ஸ்ரீ கிரிஷ் மற்றும் இணை நிறுவனர் வீணா சங்கரி முன்னிலையில் இந்த மையத்தைத் திறந்து வைத்தனர்.

பிப்ரவரி 2023 இல் நிறுவப்பட்ட சிற்பி எஸ்தெடிக்ஸ், தனது தொடக்கத்திலிருந்தே உயர்தர அழகியல் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

கோயம்புத்தூரில் அறுவை சிகிச்சையில்லா உடல் வடிவமைப்பு சாதனமான பாடிடைட் (Bodytite) அறிமுகப்படுத்திய முதல் மையமாகும். மேலும், ஜூன் 2025 இல் 24 மணி நேர வசதியுடன் மெடிசின் பாக்ஸ் பார்மசியை அறிமுகப்படுத்தி நோயாளி பராமரிப்பு சேவைகளை மேலும் விரிவுபடுத்தியது.

புதிய சிற்பி ஸ்கேன்ஸ் & சிற்பி கிளினிக் மையம், மார்பக அல்ட்ராசவுண்ட் மற்றும் பெண்களுக்கான இமேஜிங், உணவுமுறை & ஊட்டச்சத்து பராமரிப்பு, அழகுசாதன மகளிர் மருத்துவம், ஆங்கோ-பிசியோதெரபி, எடை குறைப்பு & உடல் வடிவமைத்தல் திட்டங்கள்,

நிணநீர் வீக்கம் பராமரிப்பு, மார்பக புற்றுநோய் ஆதரவு சேவைகள், பாலியல் நல்வாழ்வு ஆலோசனை, மனஅழுத்த மேலாண்மை, சிறுநீர் கட்டுப்பாடு சிகிச்சை , உடல் பருமன் மேலாண்மை ஆகிய சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் மற்றும் நிபுணர் மருத்துவர்களின் ஆலோசனையுடன் வழங்குகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து சட்டமன்ற...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...