Header Top Ad
Header Top Ad

இருகூரில் வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து கொடுக்க தீபாவளி நாள் வரை கெடு வழங்கியுள்ள மக்கள்

கோவை: இருகூரில் வழங்கப்பட்ட பட்டா இடம் 20 நாட்களில் அளந்து தரப்படவில்லை என்றால் நாங்களே அளந்து கொள்வோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் ஏழு ஏக்கர் நிலத்தில் 249 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. இது தொடர்பாக தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் அந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சுமார் 30 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பட்டா வழங்கப்பட்ட இடம் பயனாளிகளுக்கு அளவீடு செய்து தரப்படாததால் பயனாளிகள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை அவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு அளித்த போதிலும் தற்பொழுது வரை நிலம் அளவீடு செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் காத்திருப்பு போராட்டம் ஆனது இருகூர் டைனமோ கிளப் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐஎம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

காத்திருப்பு போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் நாகராஜ் முன்னிலையில் பேச்சுவார்த்தையானது நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் மகேந்திரன் சிபிஐஎம் உட்பட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் 20 நாட்களில் நிலம் அளவீடு செய்து தரப்படும் என்று அதிகாரிகள் கூறினர் எழுத்துப்பூர்வமாக கடிதம் தர வேண்டும் என்று தெரிவித்ததால் தாசில்தார் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தார். அதனைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர்.

20ம் தேதிக்குள் நிலத்தை அளந்து கொடுக்கவில்லை என்றால் 24 ஆம் நாங்களே நிலத்தை அளந்து குடியேறுவோம் என்று கட்சியினரும் அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர்.

Recent News