ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்களை வாங்க பூ மார்க்கெட்டிற்கு படையெடுக்கும் மக்கள்

கோவை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர்.

Advertisement

நாளைய தினம் ஆயுத பூஜை பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் தொழில்துறையினர் பொதுமக்கள் என பலரும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள், வாகனங்கள், கருவிகளுக்கு பூஜைகள் மேற்கொள்வர்.

வாழை மரக்கன்றுகள், செந்தவந்தி பூ மாலைகள், பொறிகடலை, மா இலைகள், ஆகியவற்றை வைத்தும், வண்ண வண்ண காகித தோரணங்களால் வாகனங்கள் தொழிற்சாலைகள் உள்ள கருவிகள் ஆகியவற்றை அலங்கரித்து பூஜைகள் மேற்கொள்ளப்படும். எனவே இன்று பொதுமக்கள் பலரும் பூஜை பொருள்கள் பூமாலைகள் வாழை மரக்கன்றுகளை அதிகளவு வாங்கி செல்கின்றனர்.

அதன்படி கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் அனைத்து பொருட்களும் கிடைப்பதால் பொதுமக்கள் பலரும் பூ மார்க்கெட்டிற்கு வந்து பொருட்களையும் வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அதிகளவு கூட்டமானது காணப்பட்டது. அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரி செய்தனர்.

Advertisement

மேலும் பொது மக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கும் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்த வாகனங்களுக்கும் போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு அதிகமாக வாங்கும் செவ்வந்தி பூ கிலோ 240 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரையிலும் வாழை மரக்கன்றுகள் ஜோடி 200 ரூபாயில் இருந்தும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு பாடத்திட்டம் எப்படி இருக்கும்?- மயில்சாமி அண்ணாதுரை கூறிய தகவல்…

கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.