கோவையில் சேவலை திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் சேவலை திருடி டி-ஷர்ட்டுக்குள் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகரில் அண்மையில் அதிக அளவிலான திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற வருகின்றன. காவல்துறையினரும் கவர்ந்த பணிகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

அதே சமயம் சிசிடிவி கேமராக்களிலும் திருட்டு சம்பவங்கள் கொள்ளை சம்பவங்கள் ஆகியவை பதிவாவதால் அவற்றைக் கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளை எளிதில் பிடித்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகர் சுந்தராபுரம்- மதுக்கரை மார்க்கெட் சாலையில் மரப்பட்டறை வைத்திருப்பவர் கனகராஜ். இவர் பட்டறையில் சில சேவல்களையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் 28ம் தேதி ஒரு சேவல் காணாமல் போயுள்ளது.

தொடர்ந்து அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சேவலை பிடித்து அதை டீசர்ட்க்குள் மறைத்து வைத்து நண்பருடன் தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து கனகராஜ் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று சிசிடிவி காட்சிகள் குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதற்கு மிகவும் உதவியாய் இருப்பதால் சிசிடிவி கேமராக்களை பொதுமக்கள் கடைகளை நடத்துபவர்கள் ஆகியோர் முடிந்தவரை பயன்படுத்துமாறு காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp