Header Top Ad
Header Top Ad

பேரூரா? சட்டவிரோத ஜோரூரா? கண்ணைக் கட்டிக் கொண்டதா காவல்துறை?

கோவை: காந்தி ஜெயந்தி முன்னிட்டு கோவையில் கள்ளச் சந்தையில் மது விற்பனை களைகட்டி உள்ளது.

இன்று அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது, மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள் கண்டிப்புடன் அறிவித்து உள்ளனர். அதன்படி மதுக்கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டு உள்ளன.

இந்நிலையில் கோவை, பேரூர் படித்துறை அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை எண். 1767. இந்த கடையில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காலை 8 மணிக்கே மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகின்றது.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

கோவை மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் இது போன்ற சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், போலீசார் கணக்கு காட்டுவதற்காக சிலரை மட்டும் கைது செய்வதாகவும், சில நூறு மதுபாட்டில்களை மட்டும் பறிமுதல் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Recent News