கோவை: கோவையில் இந்த வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 10ம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை இங்கே காணலாம்:
அக்டோபர் 4 (சனிக்கிழமை)
கோவை முழுவதும் இன்று பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33°C, குறைந்தபட்சம் 24°C பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை)
வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். மதியத்திற்கு மேல் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33°C, குறைந்தபட்சம் 24°C என இருக்கும்.
அக்டோபர் 6 (திங்கட்கிழமை)
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும் சாத்தியம் அதிகம். வெப்பநிலை அதிகபட்சம் 34°C, குறைந்தபட்சம் 24°C என பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 7 (செவ்வாய்க்கிழமை)
கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பகுதியளவில் மேகமூட்டம் காணப்படும். சில நேரங்களில் சேலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°C, குறைந்தபட்சம் 24°C என இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 8 (புதன் கிழமை)
கோவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34°C, குறைந்தபட்சம் 24°C என இருக்கும்.
அக்டோபர் 9 (வியாழக்கிழமை)
லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34°C, குறைந்தபட்சம் 24°C என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 10 (வெள்ளிக்கிழமை)
வெள்ளிக்கிழமை கோவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33°C, குறைந்தபட்சம் 24°C என இருக்கும்.