கோவை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்தும் அதில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் VVPAT அடங்கிய வாகனங்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சி தலைவர் பவன்குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டன.
இந்த வாகனங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று தேர்தல் பணியாளர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செயல் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்றும் விழிப்புணர்வு வாகனங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் வாக்களித்த பிறகு அதனை எவ்வாறு சரி பார்க்க வேண்டும் என்று முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் அதனை எவ்வாறு சரி பார்க்க வேண்டும் தவறு நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முழுமையாக அறிந்து கொண்டனர்.

