பேட்ச் ஒர்க் வேண்டாம்- தரமான சாலை தான் வேண்டும்- கோவையில் சாலை மறியல்…

கோவை: தரமான தார் சாலை அமைத்து தர வலியுறுத்தி சிபிஐஎம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டத்திலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Advertisement

கோவை மாநகராட்சி ஒண்டிப்புதூர்- இருகூர் செல்லும் சுமார் 3 கிமீ சாலை மோசமாக உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தரமான தார் சாலை அமைத்து தர வேண்டி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவ்வப்போது பேட்ச் ஒர்க் மட்டுமே செய்யப்பட்டு வருவதால் பெரிதளவு பயனில்லாமல் சாலை மீண்டும் மீண்டும் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. மழைக்காலங்களில் அதிகளவிலான விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் சிபிஐஎம் கட்சியினருடன் இணைந்து கடை அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதிக்கு தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அனுமதியை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு- ஆன்லைன் பதிவில் கோவை முதலிடம்…

கோவை: ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. வீட்டு வசதிகள் குறித்து சுய...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...