கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் மனைவி,பெண் குழந்தை உடன் வசித்து வருகிறார். அவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் தனது 9 வயது மதிக்கத்தக்க மகளை கற்பழித்து விடுவதாக மிரட்டுவதாக கூறி கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

மேலும் தனது மகளுக்கு மிரட்டல் விடுத்த ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

Advertisement

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சக காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் மண்ணெண்ணய் குண்டு வீசிய கும்பலில் ஒருவர் கைது…

கோவை: கோவையில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார். காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.