மிகவும் விஷேசமான மகாளய அமாவாசை; இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

கோவை: எதிர்வர இருக்கும் சனி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை 5 ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்கும் பலனை அளிக்கிறது. அது எந்தெந்த ராசி என்று தெரியுமா?

பொதுவாக அமாவாசை நாட்களில் நமது 3 தலைமுறை முன்னோர்கள் பூமிக்கு வந்து, அவரவர் சந்ததியினர் கொடுக்கும் உபசாரங்களை ஏற்று, குடும்பத்தினரை ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டால், நீண்ட ஆயுள், புகழ், செல்வம் மற்றும் ஆரோக்கியம் சேரும் என்பது நம்பிக்கை.

குறிப்பாக, தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானவை. ஆனால், அதை விடவும் மகாளய அமாவாசை ரொம்பவும் சிறப்பு வாய்ந்தவை.

Advertisement

மகாளய பட்சம்

மகாளய என்றால் ஒன்றாக வருதால் என்று பொருள்படும். அதாவது,மறைந்த நம் முன்னோர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து வரும் காலம் தான் மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. பட்சம் என்றால் 15 நாட்கள் என்று அர்த்தம். நம் முன்னோர்கள் நம்முடன் தங்கக்கூடிய நாட்களை மகாளய பட்சம் என்று அழைக்கிறோம்.

Advertisement

புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் துவங்கி அமாவாசை வரை இந்த மகாளய பட்சம் நீடிக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தான் மகாளய அமாவாசை.இந்த அமாவாசையில் தாய் மற்றும் தந்தை வழியைச் சேர்ந்த அனைத்து முன்னோர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் உள்பட நாம் தொடர்புடைய அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே, இந்த மகாளய அமாவாசை தனிச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நாட்களில் நீர்நிலைகளில் திரளும் மக்கள், நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கின்றனர். நீர்நிலைகளில் எள் மற்றும் தண்ணீரை இறைத்தும், அரிசி மாவில் பிண்டம் பிடித்து,அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோவையைப் பொறுத்தவரையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறை மற்றும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையிலும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

எந்த நேரம்?

மகாளய அமாவாசை திதி அக்டோபர் 9ம் தேதி இரவு 9.53 மணிக்கு துவங்குகிறது. அக்டோபர் 10ம் தேதி இரவு 9.34 மணிக்கு திதி முடிவடைகிறது.

சூரிய வழிபாடும்…

இந்தாண்டு மகாளய அமாவாசை புரட்டாசி மாதத்தின் 4வது சனிக்கிழமையில் (அக்டோபர் 10) வருகிறது. இது டபுள் மடங்கு சுப பலன்களை அளிக்கும். அதேபோல, மகாளய அமாவாசை, அஸ்தம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதியான சூரிய பகவான் தான், தந்தை வழி உறவுகளுக்கு காரணமான கிரகமாகும். அஸ்தம் நட்சத்திரம் வரும் தினத்தில் சூரிய வழிபாடு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.

மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடுவதுடன், சூரிய பகவானையும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த சிறப்புமிக்க மகாளய அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்களை தற்போது காணலாம்.

மகாளய அமாவாசை தினத்தில் அதிகாலை நேரமாக எழுந்து புனித நீராட வேண்டும். அதன்பிறகு, தண்ணீரையும், எள்ளையும் இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும்.

பகலில் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை சமைக்க வேண்டும். பின்னர், அதனை வாழை இலை போட்டு படையலிட வேண்டும்

வீட்டில் சமைத்த உணவுகள் அனைத்திலும் சிறிதளவு எடுத்து தட்டில் வைத்து காகத்திற்கு படையலிட வேண்டும். அதன்பிறகே வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.

இந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் நல்ல பலனை கொடுக்கும். அதேபோல, வஸ்திர தானம், பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவது சிறப்பானதாகும்.

மகாளய அமாவாசை தினத்தில் அன்றைய மாலை வீட்டிலோ அல்லது கோவிலிலோ, தங்களின் வேண்டுதலை முன்வைத்து மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும்.

5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

சனி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசையும் இணைந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளான அக்.,10ம் தேதி, 5 ராசிகளுக்கு சுப பலனை தரக்கூடியதாக அமைந்துள்ளது. மேஷம், ரிஷபம், துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் வேலை, தொழில் மற்றும் குடும்பத்தில் நன்மையை சந்திக்க உள்ளனர்.

மேஷம் ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மகாளய அமாவாசை பல யோகங்களை தரக்கூடிய நாளாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் சாதகமான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் பணிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார நிலையும் மெல்லமெல்ல உயரும்.

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களுக்கு நிதி விவகாரங்களில் அதிக நன்மை அளிக்கும். ரொம்ப நாளாக உங்களுக்கு வராமல் இருக்கும் பழைய கடன்கள், நிலுவைத் தொகைகள் வந்து சேரும். தொழில் செய்பவர்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்ல வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கலாம். குடும்ப சூழ்நிலை மேம்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவால் உங்களுக்கு மனதைரியம் உருவாகும். முன்னோர்களுக்கு நீங்கள் செய்யும் தர்ப்பண காரியம், நீங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு உங்களுடைய வேலை மற்றும் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மனவலிமை பெறுவீர்கள். புதிய பயணங்களும், முயற்சிகளும் லாபத்தை தரும்.

மகர ராசி

மகர ராசியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அமாவாசை வழிபாடு, பல்வேறு நன்மைகளை அளிக்கும். சனி பகவானின் ஆசியும், முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணமும் உங்களின் குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகளை ஏற்படுத்தும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடங்களில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரலாம். தொழிலில் ஏற்பட்டிருந்த நீண்ட நாள் தடைகள் அகலும். கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மகாளய அமாவாசையின் அருள் முழுமையாக கிடைக்கும். முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், மன அமைதி, குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பணியிடத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். இத்தனை நாட்கள் இருந்து வந்த வேலைப்பளு குறையும். கொடுக்கல், வாங்கலில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் வேலை மற்றும் தொழில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

தடாகம் வழியே மேல்முடி கோவில் செல்ல தடை- இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்…

கோவை: தடாகம் வழியாக மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கபட்டதை கண்டித்து இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு தடாகம் வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம்...

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...