தடாகம் வழியே மேல்முடி கோவில் செல்ல தடை- இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்…

கோவை: தடாகம் வழியாக மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கபட்டதை கண்டித்து இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

கோவை மாவட்டம் மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு தடாகம் வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பெருமாள்முடி மற்றும் மேல்முடி மலைக் கோவில்களுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலை ஏறிச் சென்ற பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேல்முடி ரங்கநாதர் மற்றும் பெருமாள்முடி மலைக் கோவில்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

Advertisement

அதன்படி, மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு தடாகம் வழியாக மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டு, பாலமலை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பள்ளி குழந்தைகளின் மழை நீர் சேகரிப்பு கண்காட்சி…

கோவை: கோவையில் பள்ளி மாணவர்களின் மழை நீர் சேகரிப்பு கண்காட்சி பலரது வரவேற்பை பெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களின், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு...

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...