இஸ்ரோ பற்றி தெரிந்து கொள்வதற்கு கோவையில் ஓர் வாய்ப்பு…

கோவை: இஸ்ரோ பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கோவையில் 3 நாட்கள் விண்வெளிக் கண்காட்சி நடைபெறுகிறது.

Advertisement

கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி வார விழாவை முன்னிட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறும் விண்வெளிக் கண்காட்சி இன்று தொடங்கியது.

வரும் 7-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் ராக்கெட்டுகள், விண்கலன்கள், செயற்கைக்கோள்களின் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் இந்திய விண்வெளித் திட்டம் குறித்த காணொளிக் காட்சிகள், தொழில்நுட்ப விரிவுரைகள், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Advertisement

மேலும், 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ISRO சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, விண்வெளித் திட்டங்கள் மற்றும் விண்கலன்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை ISRO-வின் திருவனந்தபுரம் LPSC முன்னாள் இயக்குநர் ஹுட்டன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) முக்கியமானது என்றாலும், அறிவியலில் அடிப்படைக் கோட்பாடுகள் மிகவும் முக்கியம் என்றும், மாணவர்கள் புத்தகங்களை மட்டும் படிக்காமல் ஆய்வகங்களையும் பயன்படுத்தி, அறிவியலைப் புரிந்து கற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisement

குலசேகரப்பட்டினத்தில் செயற்கைக்கோள் ஏவுதள வளாகம் கட்டப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டிற்குள் பணிகள் நிறைவடையும் என்றும் கூறினார். 2028-ஆம் ஆண்டில் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தியாவின் விண்வெளி நிலையத்திற்காக 5 மாட்யூல்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2 மாட்யூல்களின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியரை நிலவுக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வருவதே தங்களது கனவு என அவர் தெரிவித்தார்.

கண்காட்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள், ISRO வகுப்புகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியலை விளக்குவது தங்களது அறிவையும், உரையாடல் திறனையும் மேம்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்களும் விண்வெளி மாதிரிகளை நேரில் பார்வையிட்டு தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருந்ததாக கூறினர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அரசு பள்ளி வகுப்பறைகளுக்கு புதிய மேசை இருக்கைகள்…

கோவை: அரசு பள்ளிக்கு புதிய மேசைகள் இருக்கைகள் வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 143 எண்ணிக்கையிலான மேசைகளுடன் இணைக்கப்பட்ட இருக்கைகளை, M/s. Larsen & Toubro Limited, Chennai நிறுவனத்தின்,...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...