முதன்முறையாக கோவை வந்த அண்ணாமலை – ஏர்போர்ட்டில் மாஸ் வரவேற்பு ! – வீடியோ

கோவை: பாஜகவில் இருந்து விலகிய பிறகு முதன்முறையாக கோவைக்கு வருகை புரிந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகிய பிறகு இன்று கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் அளித்திருந்தார், அவரது கடிதம் ஆனது ஐந்தாம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அன்றைய தினம் இணைய வழியில் பேசிய அவர் புதிய கட்சியை துவக்குவதாக தெரிவித்திருந்தார் அவரது ஆதரவாளர்கள் பலரும் We The Leader என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

அவர் அறிவித்த குறிப்பிட்ட நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் இணைய வழியில் அதில் இணைந்திருந்தனர் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவு அளித்து அவரது கட்சியில் இணைந்து இருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்று விமான மூலம் அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார் கோவை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குறிப்பாக We The Leader என்று முழக்கமிட்டு பூங்கொத்துக்களை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அனைவரது வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அண்ணாமலை அவரது இல்லத்திற்கு புறப்பட்டார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...