Rasipalan Today | இன்றைய ராசிபலன்

Rasipalan Today: 12 ராசிகளுக்கான இன்றைய (ஜூன் 13ஆம் தேதி) ராசிபலனை இந்தத் தொகுப்பில் காணலாம்.

மேஷம்

இன்று உங்களுக்குத் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும் நாடாக அமையும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.

Advertisement

ரிஷபம்

இன்று உங்களுக்குப் பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்குப் பின் சாதகமான பலன்கள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

கடகம்

இன்று உங்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பொன்னான நாளாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் மாற்றங்கள் சாதகமான பலனைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும்.

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். கூட்டுத் தொழில் தொடங்கும் முயற்சிகள் நல்ல லாபத்தைத் தரும். குடும்பத்தில் பிள்ளைகளின் கல்வி மற்றும் சுப காரியங்கள் கைகூடும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக அமையும்.

Advertisement

கன்னி


இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றியாக முடியும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று உங்களுக்குச் சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய முடிவுகள் மற்றும் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் தேவையற்ற வாதங்களைத் தவிர்க்கவும். வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

NCC News Rasipalan today
NCC News

விருச்சிகம்

இன்று புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பூர்வீக சொத்துச் சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.

தனுசு

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான சாதகமான சூழல் உண்டாகும். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாக அமையும். தந்தையின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். மன அமைதி கூடலாம்.

மகரம்

இன்று ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் நல்வழிப்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நாள் முழுவதும் மகிழ்ச்சி நீடிக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் நல்ல வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை சற்றே அதிகமாக இருந்தாலும் திறம்பட முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பண வரவு சுமாராக இருக்கும்.

மீனம்

இன்று உங்களுக்குப் புகழ் மற்றும் பெருமை தேடிவரும் நாடாக இருக்கும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Today Rasipalan | இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டமம்

இன்றைய 12 ராசிகளுக்குமான ராசிபலன்கள், கிரக நிலைகள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களை விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...